IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வளர்ச்சி குறைந்தாலும் பொருளாதாரம் மந்தமாகவில்லை – சொல்கிறார் நிர்மலா

Get real time updates directly on you device, subscribe now.


நாட்டில் பொருளாதாரம் மந்தமாகவில்லை, ஆனால் வளர்ச்சி விகிதம் மட்டும்தான் குறைந்துள்ளது என ராஜ்யசபா அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் நேற்று நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதம் செய்யப்பட்டது. அதில் பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை, வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் மந்தமான சூழலுக்கு செல்லவில்லை என்றார்.

பொருளாதாரம் எப்போது மந்தமான நிலைக்கு செல்லாது. கடந்த 2009 -2014ம் நிதியாண்டின் இறுதியில் ஜி.டி.பி. எனப்படும் உற்பத்தி விகிதம் 6.4 விகிதமாக இருந்தது. ஆனால் தற்போது 2014 – 2019ம் நிதியாண்டில் உற்பத்தி 7.5 சதவீதமாக உயரந்துள்ளது என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

ஆனால் நிர்மலா சீத்தாராமனின் விளக்கத்திற்கு அதிருப்தி தெரிவித்த எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதைசுட்டிக்காட்டிய நிதியமைச்சர், ஒரு விவாதத்தை கோரும்போது அதற்கு அரசு பதிலளிக்கும் போது வெளிநடப்பு செய்வது எதிர்கட்சிகளின் பழக்கமாகிவிட்டது என நிர்மலா சீத்தாராமன் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More