IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு!

Get real time updates directly on you device, subscribe now.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் முதலாம் காலாண்டில் இருந்து இந்த வட்டி விகித குறைப்பு அமலுக்கு வருகிறது.

இதன்படி தேசிய சேமிப்பு பத்திரம், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி, அஞ்சலக நிரந்தர வைப்புகள் உள்ளிட்டவற்றுக்கான வட்டிகள் குறையும்.

அஞ்சலகத்தில் 1 முதல் 3 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புகளுக்கு 6.9 சதவீதமாக இருந்த வட்டி, 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 7.7 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு தொடா் வைப்புக்கான வட்டி இனி 5.8 சதவீதமாக இருக்கும்.

மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 8.6 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கான ஆண்டு வட்டி 4 சதவீதமாகவே தொடரும். பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக குறைகிறது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி 6.8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 6.9 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், வங்கி வட்டி விகிதங்களுடன் ஒப்பிடும்போது அஞ்சலக வைப்புகளுக்கான வட்டி விகிதம் இப்போதும் சற்று கூடுதலாகவே உள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader