IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சர்வதேச ஸ்டைல், பேஷன் ஆடைகளுக்காக எப்பிபி “அனைத்தையும் கொண்டுள்ளது” பிரச்சாரம் தொடக்கம்

0 37


பிரபல பேஷன் ஆடைகளின் இடமாக திகழும் பியூச்சர் குழுமத்தின் எப்பிபி தற்போது புதிய `எப்பிபி அனைத்தையும் கொண்டுள்ளது’ என்னும் பிரச்சாரதத்தை துவக்கியுள்ளது.


இந்த பிரச்சாரம் எப்பிபி-ஐ ஒரு நவநாகரீக பிராண்டாக அனைவரிடமும் கொண்டு செல்வதாகும். இது ஒவ்வொரு பேஷன் பிரியர்களுக்கும் ஏற்ற இடமாகும். நவீன பேஷன் ஆடைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள், சமீபத்திய உலகளாவிய மற்றும் இந்திய பேஷன் ஆடைகளை ஒரே இடத்தில் கிடைக்கும் வாய்ப்பை எப்பிபி வழங்குகிறது.


ஒருவர் பேஷனை பற்றி யோசிக்கிறார் என்றால், அதை பூர்த்தி செய்யக்கூடிய ஒரே இலக்கு எப்பிபி ஆகும். இங்கு பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கு என்று ஏராளமான பேஷன் ஆடைகள் குவிந்து கிடக்கின்றன. பெண்கள் பிரிவில், குர்த்தா, விழாக்கால லெக்வேர் உள்ளிட்ட ஏராளமான ஆடைகள் உள்ளன. இதேபோல் ஆண்கள் பிரிவிலும் டெனிம் ஆடைகள், போலோ மற்றும் கறுப்பு நிற ஆடைகள் என ஏராளமான ஆடைகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்புவதை தேர்வு செய்யலாம்.


இது குறித்து எப்பிபி தலைமை செயல்பாட்டு அதிகாரி ராஜேஷ் சேத் கூறுகையில், எப்பிபி வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை அறிந்துள்ளது. அவர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான ஆடைகள் இங்கு குவிந்துள்ளன. பேஷன் ஆடைகளை விரும்பும் அனைவருக்கும் ஏற்ற ஆடைகள் இங்கு உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு என்ன பிரபலமாக உள்ளது' என்னும் அனுபவத்தை வழங்க சர்வதேச டிசைன்களை கொண்ட ஆடைகள் மற்றும் புதிய பாணிகளைக் கொண்ட ஆடைகள் உள்ளன. இதை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லும் வகையில்எப்பிபி அனைத்தையும் கொண்டுள்ளது’ என்னும் பிரச்சாரத்தை துவக்கி உள்ளது என்று தெரிவித்தார்.


சர்வதேச பேஷன்கள் மற்றும் டிசைன்கள் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உங்கள் அருகில் உள்ள எப்பிபி ஷோரூமுக்கு செல்லுங்கள். நீங்கள் விரும்பியதை வாங்குங்கள், பண்டிகை காலத்தை எப்பிபி ஆடையுடன் கொண்டாடுங்கள்.


இந்தியாவில் குறைந்த விலையில் புதிய பேஷன்களை தேர்வு செய்யும் இடமாக எப்பிபி திகழ்கிறது. இது கடந்த 2008ம் ஆண்டு துவக்கப்பட்டது. இது இந்தியாவின் பேஷன் மையமாக உள்ளது. இங்கு வணிக சந்திப்புக்கு ஏற்ற ஆடைகள் முதல் சாதாரண ரிசார்ட் ஆடைகள் வரை உள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்கான பிரத்யேக லேபிள்களின் அடிப்படையில் பொருட்களை தயாரித்து வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆடைகளை எப்பிபி கொண்டுள்ளது. தற்போதைய பேஷன் டிசைன்களை விரும்பும் இளைஞர்களின் தேவையை பூர்த்தி செய்யும் இடமாக எப்பிபி உள்ளது. இது இந்தியா முழுவதும் 86 பிரத்யேக ஸ்டோர் உள்ளிட்ட 380 ஸ்டோர்களை அனைத்து நகரங்களிலும் கொண்டுள்ளது. 2-ம் கட்ட நகரங்களிலும் இதன் ஷோரூம்கள் உள்ளன.


#FBB #Bigbazar #Diwali #collections #Starts