IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் சாதகமான நிலை !

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் சாதகமான நிலை தென்படுவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் சா்வதேச வா்த்தகம், ஏற்றுமதி நடவடிக்கைகளின் தற்போதைய நிலவரம் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இறக்குமதியைப் பொருத்தவரையில், பொறியியல் பொருள்களில் சரிவு நிலை காணப்படவில்லை. அதேசமயம், உருக்கு, தங்கம், உரம் ஆகியவற்றில் இந்த நிலை காணப்படுகிறது.

இதையடுத்து, நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறையானது குறிப்பிடத்தக்கக அளவுக்கு குறைந்துள்ளது.

உலக நாடுகளில் விநியோக நடவடிக்கைகள் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளதையடுத்து, சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு மேம்படத் தொடங்கியுள்ளது.

இதனை எடுத்துக்காட்டும் வகையில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் ஏப்ரலில் ஏற்ப்பட்ட கடுமையான சரிவுக்குப் பிறகு தற்போது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சாதகமான நிலை தென்படத் தொடங்கியுள்ளது என்று தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader