பப்ஜி போனால் என்ன…..ஃபாஜி கேம் வந்தாச்சு!

Get real time updates directly on you device, subscribe now.

சீன செயலியான பப்ஜி (PUBG)கேம் தடைசெய்ததைத் தொடர்ந்து புதிய பாஜி (FAU-G) கேம் இந்திய வெளியீட்டு விபரங்களை என்கோர் கேம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாஜி(FAU-G) கேமஜனை இந்திய வெர்சனில் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. எனினும், இந்த கேமை உருவாக்கி வரும் என்கோர் கேம்ஸ் தனது பாஜி கேம் வெளியீட்டு குறித்த விவரங்களை தனது டுவிட்டர் அக்கவுண்ட்டில் அறிவித்து உள்ளது.

பாஜி – பியர்லெஸ் அண்ட் யுனைட்டெட் கார்ட்ஸ்(Fearless And United Guards) என்ற விரிவாக்கம் கொண்ட கேம் நவம்பர் மாதம் வெளியாகிறது. மேலும் இந்த கேமின் 1 நிமிட டீசர் வீடியோவையும் என்கோர் கேம்ஸ் வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய கேம் கிராபிக்ஸ் மற்றும் கேம்பிளே தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த கேம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது. முன்னதாக இந்தியாவில் பப்ஜி கேமிற்கான தடை உத்தரவு வெளியானது. கேம் அறிவிப்பின் போது, இது அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த கேம் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டவிட மேலும் தாமதமாகும் என தெரிகிறது.

பாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருக்கிறார்.

#faug teaser #faug grapics #faug game #in4net

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More