IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆடம்பர வசதிக்காக மகளை நரபலி கொடுத்த தந்தை! மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு

Get real time updates directly on you device, subscribe now.

கந்தர்வக்கோட்டை அருகே நொடியூரில் வசதி வாய்ப்பு கிடைக்கும் என ஜோதிடத்தை நம்பி, பெற்ற மகளைக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் பெற்றோருடன் 13 வயது சிறுமி வித்யா வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் வீட்டின் அருகேயுள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க செல்லும் போது தைல காட்டில் கொலை செய்யப்பட்டார். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் 6 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வித்யாவின் தந்தை பன்னீர், ஜோதிடம் மாந்திரீகத்தின் நம்பிக்கையில் அவருக்கு சக்தி அதிகரிக்கவும் வசதி வாய்ப்பு வரவும் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு பெற்ற மகளையே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் தந்தை பன்னீர் மற்றும் கொலைக்கு உதவிய உறவினர் குமாரையும் கைது செய்துள்ளனர். மேலும் மகளான சிறுமியை நரபலி கொடுக்க அறிவுறுத்திய பெண் மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader