IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விவசாயிகளை விவசாய கூலிகளாக்கும் அடிமை சாசனம்! விஞ்ஞானி பொன்ராஜின் கருத்து

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய அரசு சமீபத்தில் விவசாயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் மூன்று சட்டங்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகளின் வணிகம், வர்த்தகம் மற்றும் விற்பனை தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியான அதிமுக மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொன்ராஜ் வெள்ளைச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றியவர். தற்போது இவர் அப்துல் கலாம் கடைசியாக எழுதி முடிக்காமல் விட்டுச் சென்ற புயலைத் தாண்டினால் தென்றல் என்ற நூலை எழுதி முடிக்கும் பணியை பொன்ராஜ் மேற்கொண்டுள்ளார்.
இவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது,

விவசாயிகளை விவசாய கூலிகளாக்கும் அடிமை சாசனம்

1) Contract Farming by Corporates கார்பரேட்களின் ஒப்பந்த வேளாண்மை, விவசாய மானியங்கள் அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மாறும்.

2) அரசு கொள்முதல் காலப்போக்கில் ஒழிக்கப்படும், APMC செயலிழக்கும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் படிப்படியாக ஒழிக்கப்படும்.

3) இடைத்தரகர்களான வியாபாரிகள் ஒழிக்கப்பட்டு, கார்பரேட் ஏஜென்டுகள் இடைத்தரகர்களாக மாறுவார்கள்.

4) கந்துவட்டி காரர்கள் ஒழிக்கப்பட்டு கார்பரேட் கம்பெனி வங்கிகள் முன்பணம் கொடுத்து கந்து வட்டி வசூலிக்கும்.

5) விவசாயிகளுக்கு மானியங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு பயிர் ஈடுபொருள், விதை, உரம், மருந்து, டிராக்டர், அறுவடை எந்திரம், கண்காணிப்பு தொழில்நுட்பம் கான்ட்ராக்ட் பார்மிங் கம்பெனி கொடுக்கும்.

6) 1 -3 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளை இணைத்து 100க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் சேர்த்து கம்பெனி சொல்லும் விவசாயம் நடக்கும்.

7) பெரும்பாலும் விவசாய கூலிகளுக்கு பதில் விவசாய இயந்திரங்கள் வேலை செய்யும்.

8) ஒரு வேலை சிறு குறு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வேலை செய்ய திறன் இருந்தால் விவசாய வேலை செய்வதற்கு கூலி கண்டிப்பாக கிடைக்கும்.

9) கூலிக்கு வேலை செய்து விவசாயி வாழ்ந்து கொள்ள வேண்டியது தான்.

10) விவசாயகூலிகள் வேலையற்றவர்களாக்கப்படுவார்கள்.

Your Digital PR

11) இரண்டு ஆண்டுகள் வரை #MSP இருக்கும், அதன் பின்னர் எப்படி கேஸ் மானியம் ஒழிக்கப்பட்டதோ அப்படி #MSP யும் ஒழிக்கப்படும், காரணம் ஒப்பந்தம் செய்த கார்பரேட்டுகளுக்கு நட்டம் ஏற்பட்டு விட்டது என்று காரணம் கூறப்படும்.

12) அடி மாட்டு விலைக்கு விளை பொருள் வாங்கப்படும், அதற்குள் #MSP விலையில் வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களும், லோக்கல் வியாபாரிகளும் ஒழிக்கப்பட்டு இருப்பார்கள், குறைந்த விலைக்கு விற்கப்பட்டு நட்டக்கணக்கு காட்டப்படும்.

13) அரசின் கட்டுப்பாடற்ற திறந்த சந்தையில் விளைபொருள்களை குறைந்த விலைக்கு வாங்கி அனைத்து செலவுகளையும் கழித்து விட்டு மீதம் இருந்தால் கூலியை கழித்து விட்டு விவசாயிகளுக்கு மீதம் இருந்தால் ஏதேனும் கொடுக்கப்படும்.

14) அதில் விவசாயிகளுக்கு கடன் ஏற்பட்டால் அந்த கடனுக்கு ஒப்பந்தம் செய்த கம்பெனிக்கு இடத்தை விற்க வேண்டிய நிலை வரும்.

15) ஒப்பந்த கம்பெனிகள் நேரடியாக விளை பொருளை எடுத்துக்கொண்டு பதுக்கி வைத்து செயற்கையான தேவை உருவாக்கி திறந்த சந்தையில் கூடுதல் விலையில் விற்று லாபம் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

16) மக்களுக்கு உணவுப் பொருள்களின் விலைவாசி உயரும்.

இடைத்தரகர்களை ஒழித்து, விவசாய சீர்திருத்தங்கள் வேண்டும், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு உருவாக்குங்கள், விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையை கொடுங்கள் என்று மத்திய அரசை கேட்டால்? அதை விடுத்து மோடி அரசு ஒட்டு மொத்தமாக கார்ப்பரேட்டுக்கு விவசாயிகளை அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் வேலையை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பயன்படுத்தி ஜனநாயக படுகொலை செய்திருக்கிறது மத்திய அரசு.

இது மாநில அரசின் சட்டம் இயற்றும் மாநில சுயாட்சி உரிமையை பரித்திருக்கிறது.

இதை மாநில அரசின் சட்டத்தால் நிராகரிக்கவும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் நிலை ஏற்படுத்த மாநில அரசால் முடியும். ஆனால் பிஜேபியின் அடிமை மாநில அரசால் அதை செய்ய‌முடியாது.

நம்மை ஆள்பவர்களின் ஊழல் மத்திய அரசிடம் நம்மை அடிமையாக்குகிறது.

மாணவர்கள் டாக்டர் ஆகும் கனவு #NEET2020 ஆல் தகர்க்கப்பட்டது.

மாணவர்கள் இனிமேல் மேல்படிப்பு கனவு #NEP2020 ஆல் தகர்க்கப்பட்டது.

தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு #GST ஆல் தகர்க்கப்பட்டது.

அன்றாட கூலி தொழிலாளர்கள், மரபு சாரா தொழில்கள் #DEMONITIZATION
ஆல் தகர்க்கப்பட்டது.

நமது வாழ்வாதாரமும், உயிரும் #COVID19 ஆல் தகர்க்கப்பட்டது.

ஒட்டு மொத்த பொருளாதாரம் #ModiGovt ஆல் வீழ்த்தப்பட்டது, வேலை இழந்து கையில் பணப்புழக்கம் இல்லாமல் போனது.

#FarmBill ஆல் ஒட்டு மொத்த விவாசியகள் இனி விவசாய கூலிகளாக்கப்படுவார்கள்.

இதை நாம் தேர்தெடுக்காத மத்திய, மாநில அரசுகள் செய்கிறது.

இனியும் தூங்கினால் அடிமையாக்கப்பட்ட பின்பு இனி நம் குழந்தைகள் தான் உயிரை இழந்து மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

‌ இரண்டாம் சுதந்திரப் போராட்டத்திற்கு இனி வெகு நாட்கள் இல்லை.

ஜனநாயக முறையில் வெகுண்டெழுந்து நம் எதிர்பை பதிவு செய்து மாநில அரசை விவசாய பாதுகாப்பு சட்டம் இயற்ற செய்யா விட்டால் நமது விவசாயிகளின் அடிமை சாசனம் உறுதி என தனது முகநூலில் பொன்ராஜ் வெள்ளைச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader