IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த குடும்பம்! போலீசார் விசாரணை!!

0 46

தொழிலாளி அவரது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாடுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


விழுப்புரம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40). இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 35). இவர்களது மூத்த மகள்கள் கீர்த்திகா (வயது 17) பிளஸ்2-வும், இளைய மகள் சமிக்‌ஷா எட்டாம் வகுப்பு படித்து வந்தனர்.


இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தியின்  உறவினர் ஒருவர், இவர்களுக்கு போன் செய்துள்ளார். ஆனால் இவர்களுடைய போன் சுவிட்ச் ஆபில் இருந்துள்ளது.


இதையடுத்து அவர் நேற்று காலை சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு
சென்றுள்ளார்.  வீடு  உள்பக்கமாக பூட்டி இருந்தது. உறவினர் வீட்டின் கதைவை வெகு நேரமாக தட்டியுள்ளார். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.


இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் வீட்டின் கதவை உடைத்து கொண்டு போலீசார் உள்ளே சென்றனர்.


வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுந்தரமூர்த்தி தூக்கில் பிணமாக வாயில் நுரை தள்ளியபடியும் தொங்கி கொண்டிருந்தார். மனைவி மற்றும் மகள்கள் கீழே பிணமாக கிடந்தனர். இவர்கள் சடலம் அழுகிய நிலையில் இருந்தது, இறந்து இரண்டு நாட்கள் இருக்கும் என தெரிகிறது.

போலீசார் தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் வீட்டை சோதனை செய்து வந்தனர். அவர் இறப்பதற்கு முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்திருக்கலாம் என்று சோதனை செய்தனர். ஆனால் போலீசாருக்கு எதுவும் கிடைக்கவில்லை.


இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். அப்போது முதல்கட்ட விசாரணையில் சுந்தரமூர்த்தியும், மகேஸ்வரியும் சேர்ந்து தீபாவளி பண்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இந்த ஏலசீட்டில் சேர்ந்த அனைவருக்கும் தீபாவளியை முன்னிட்டு பணம் மற்றும் பொருட்கள் கொடுக்க வேண்டியது இருந்தது.

விஷ ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை; இதன் பின்னணி என்ன?

இந்த வகையில் வசூலித்த பணம் ரூ.30 லட்சம் வரை கடன் இருந்தது. சீட்டு கட்டிய அனைவரும் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை அன்று சுந்தரமூர்த்தி அவருடைய பெற்றோரை பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு சுந்தர மூர்த்தி, மனைவி மற்றும் குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.



அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்கள் அனைவரும் வெளியூர் சென்று இருக்கலாம் என கருதியுள்ளனர். இந்நிலையில் தான் சுந்தரமுர்த்தியும்,  அவரது மனைவி மற்றும் மகள்களும் இறந்தது தெரிய வந்துள்ளது.



இது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். குடும்பத்துடன் தற்கொலை செய்து இருந்தால் அனைவருமே விஷம் குடித்து இருக்க வேண்டும். சுந்தரமூர்த்தி அனைவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு அதன்பிறகு அவர் தூக்கில் தொங்கி இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

#suicide #crime #family #vilupuram