IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முகம் பளபளக்க அழகு குறிப்புகள்

153


பியூட்டி பார்லர்கள் போகாமல் வீட்டிலேயே இருந்தபடியே முகத்தை பளபளக்க வைக்கும் சிறந்த அழகு குறிப்புகளை இங்கே காணலாம்.

  • ஆரஞ்சுப் பழ தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும்.
    மேலும் அதோடு கடலை மாவு 2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தனமும் இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து அதோடு சிறிது பாலாடை சேர்த்து குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி காய்ந்ததும் பச்சை தண்ணீரில் போப்பு போடாமல் கழுவிவிடவும். இவ்வாறு செய்தால் முகம் பளபளப்பு அடையும்.

  • பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் குகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு அரை மணி நேரம் அழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

  • தக்காளியை மிசியில் போட்டு அரைத்து ஜுஸாக்கி அதை முகத்தில் தேய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.

  • சிறிதளவு வெண்ணை எடுத்து நன்கு குழைத்து முகம், முழங்கை, கழுத்து ஆகிய இடங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

  • நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.

  • கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

  • உருளைக்கிழங்கு சாறுடன், கடலை மாவை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
  • பாதம் பருப்பை அரைத்து, தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால்
    முகம் பளபளப்பாகும்.
  • கஸ்தூரி மஞ்சள் தூளை, பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி அதை முகத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்.


#Facial #Tips #home