IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பேஷ்புக்கின் அதிரடி மாற்றங்களால் பயனர்கள் அதிர்ச்சி

6


சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமான தளங்களில் ஒன்று பேஸ்புக். இவற்றல் சில முக்கிய தகவல்கள் மறைக்கப்படவுள்ளன.


உலகளவில் அதிகளவில் பயனர்களை கொண்ட பேஸ்புக், ஒருவருடைய போஸ்டிற்கான லைக்குகளின் எண்ணிக்கை, ரியாக்சன்கள் மற்றும் வீடியோக்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை மற்றவர்கள் பார்க்க முடியாது படி அமைக்கலாம். எனினும் இந்த வசதி தற்போது ஆஸ்திரேலிய பயனர்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் படியாக இருக்கிறது.


மேலும் இதற்கான முழுமையான ஆராய்ச்சிக்கான முயற்சிகள் இன்று முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தகவலை ஆஸ்திரேலியவிற்கான பேஸ்புக்கின் இயக்குநர் Mia Garlick வெளியிட்டுள்ளார்.


இதேபோல் ஆஸ்திரேலியாவில் இன்ஸ்டாகிராமிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை மறைக்கும் வசதி கடந்த ஜுலை மாதம் முதல் சோதனை முயற்சியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.