IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அனிமேஷனுக்காக Giphy நிறுவனத்தினை வாங்கும் பேஸ்புக்

Get real time updates directly on you device, subscribe now.

முன்னணி அனிமேஷன் கோப்புக்களை (GIF) பகிரும் இணையத்தளமாக Giphy விளங்குகின்றது. உலக அளவில் அதிக மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இத்தளத்தினை பேஸ்புக் நிறுவனம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராம் தளத்துடன் இணைக்கும் நோக்கிலேயே கொள்வனவு செய்யப்படுகின்றது. இதன்படி Giphy நிறுவனத்தினை கொள்வனவு செய்வதற்கு 400 மில்லியன் டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் ஆப் என்பவற்றில் Giphy தளத்திலுள்ள அனிமேஷன் கோப்புக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி Giphy தளத்திற்கு நுழைபவர்களில் 50 சதவீதமானவர்கள் பேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளிலிருந்தே வருகை செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader