IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

Zoom-இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

தற்போது உலகளவில் ரீதியாக எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையில் வீடியோ அழைப்பு வசதியை தரும் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய சலுகைகள் மற்றும் வசதிகளை பயனர்களுக்கு அளித்து வருகின்றனர்.

குழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு பல அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன. எனினும் அண்மைக்காலமாக Zoom எனப்படும் அப்பிளிக்கேஷன் ஆனது மிகவும் பிரபலமாகக் காணப்படுகின்றது.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக Messenger Room எனும் வசதியினை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த வசதி இன்றிலிருந்து பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பயன்பாடாக அமெரிக்காவை சேர்ந்த பயனர்களுக்கு இவ் வசதியை பெறுவதற்குரிய தெரிவு பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ளது. அத்துடன் உலகளாவிய பயனர்களுக்கு இதற்கான தெரிவு மெசெஞ்சர் அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader