IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பேஸ்புக்கில் ஆன்லைன் ஷாப்பிங் வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

சமூகவலைதளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக் தனது சேவையின் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவலை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடமே இதற்கான அடித்தளத்தினை பேஸ்புக் நிறுவனம் போட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக மேலதிக வசதிகளை உள்ளடக்கி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த வசதியினை பேஸ்புக்கில் மட்டுமன்றி அந்நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இருப்பினினும் உலகில் அதிகளவானவர்கள் பயன்படுத்தும் பேஸ்புக் தளத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவது ஏனைய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader