பேஸ்புக் புகைப்படங்களை கூகுள் போட்டோஸிற்குள் மாற்றுவது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

கூகுள் நிறுவனத்தில் வழங்கப்படும் சேவைகளில் ஒன்று கூகுள் போட்டோஸ் சேவை ஒன்றாகும். இந்த சேவையில் பயனர்கள் தமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைப்பதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ முடியும்.

இந்த நிலையில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்களை நேரடியாக கூகுள் போட்டோஸ் தளத்திற்குள் மாற்றக்கூடிய வசதி பேஸ்புக்கில் காணப்படுகிறது. இதனை எவ்வாறு மேற்கொள்வது என்பதனை இங்கு காணலாம்.

முதலில் இணையதளத்தில் பேஸ்புக் தளத்தினை ஓபன் செய்து உங்கள் கணக்கினுள் லாகின் செய்து கொள்ள முடியும். பின்பு வலதுபக்கம் மூலையில் உள்ள அம்புக்குறி அல்லது முக்கோண வடிவிலான பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது தோன்றும் மெனுவில் Settings என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து Facebook Information என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் Transfer a copy of your photos and videos என்பதை கிளிக் செய்யவும். இப்போது கேட்கப்படும் பேஸ்புக் கணக்கிற்கான பாஸ்வேர்ட் சொல்லினை உட்புகுத்தி தொடரவும். அடுத்த பக்கத்தில் Choose Destination என்பதில் Google Photos என்பதை தெரிவு செய்யவும்.

அத்துடன் Photos அல்லது Video என்பதை கிளிக் செய்து Next பட்டனை அழுத்தவும். தொடர்ந்து கூகுள் போட்டோஸ் கணக்கினுள் லாகின் செய்யவும். தொடர்ந்து grant Facebook permission என்பதை Allow தெரிவு செய்யவும். இப்போது பேஸ்புக்கில் புகைப்படங்கள் அனைத்தையும் கூகுள் போட்டோஸில் பகிர்ந்து மகிழலாம்.

#facebookphotos #googlephotos #newfeature #in4net

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More