IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

20 வயது மாணவனை கடத்திய 30 வயது பெண்? இதுவும் காதல் லிஸ்ட்லதான் வருதாம்!!

44

பெண் ஒருவர் தன்னை விட 15 வயது குறைந்த ஆணை பேஸ்புக் மூலம் காதலித்து, கடத்திச் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலிப்பதாகவும், சேர்ந்து வாழ விரும்பி ஓடி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகரை சேர்ந்த சுப்பையாவின் மகன் மணிகண்ட பிரபு (வயது 20). இவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிகாம் இறுதியாண்டு படித்து வந்தார். எப்போதும் செல்போனில் மூழ்கி கிடந்த இவருக்கு, மலேசிய நாட்டில் உள்ள பிரியா (வயது 35) என்பவருடன் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.


பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனாலும் அவர் மணிகண்ட பிரபுவை காதலித்து வந்துள்ளார். இவர்கள் ஆன்லைன் காதலுக்கு வயது தடையாக இல்லை. தன்னை விட 15 வயது குறைந்தவர், கல்லூரி மாணவர் என்று தெரிந்தும் மணிகண்டபிரபுவை ப்ரியா காதலித்து வந்துள்ளார். இந்த ரகசிய காதலர்கள், ஒரு கட்டத்தில் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான, நாள் இடம் என் எல்லாவற்றையும் முடிவு செய்துள்ளனர்.


பேஸ்புக் காதலில் ருசிகரம்


மலேசியாவில் வசித்து வந்த ப்ரியா, சம்பவத்தன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். நேராக அவர் தஞ்சை வந்துள்ளார். அதன் பிறகு மணிகண்டனை தொடர்பு கொண்டு தான் வந்து விட்ட தகவலைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்து கிளம்பிய மணிகண்டபிரபு, ப்ரியாவை சந்திக்கச் சென்றார். இரவு நெடு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. மணிகண்ட பிரபு, ப்ரியா என்ற பெண்ணைச் சந்திக்கச் சென்ற தகவல் மணிகண்ட பிரபுவின் தாய் அன்புராசுக்கு தெரிய வந்தது.

Related Posts
1 of 7


மகன் வீடு திரும்பாததைத் தொடர்ந்து, பொன்னமராவதி போலீசில் அன்புராசு புகார் செய்தார். அதில், தனது மகனை பிரியா என்ற பெண் கடத்தி சென்று விட்டதாகவும், அவனை மீட்டு தரவேண்டும் என்றும் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டபிரபுவை தேடி வருகின்றனர். இதற்கிடையில், பிரியா தனது காதலன் மணிகண்டபிரபுவை மலேசியா அழைத்து சென்றிருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#ponnamaravathi #love #facebok