IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பியூட்டி App செய்த மாயம்! முகநூல் காதலனை நேரில் பார்த்ததும் தெறித்து ஓடிய காதலி!!

16


பியூட்டி ஆப் மூலம் எடிட் செய்யப்பட்ட படத்தைப் பார்த்து வாலிபரின் காதல் வலையில் விழுந்த கல்லூரி மாணவி, அந்த காதலனை நேரில் பார்த்ததும் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதனால் அந்த வாலிபர் பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து நடந்துள்ளது


ஸ்மார்ட் போன், மலிவு விலை டேட்டா வசதி வந்ததில் இருந்து பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேப்போல இந்த சமூக ஊடங்களால் ஏற்படும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படியொரு பிரச்சினைதான் கோவையில் நடந்திருக்கிறது. பியூட்டி ஆப் பயன்படுத்தி, எடிட் செய்து அழகாக்கப் பட்ட படத்தைப் பார்த்து வாலிபரின் காதல் வலையில் விழுந்த கல்லூரி மாணவி, அந்த வாலிபரை நேரில் சந்தித்ததும், நான் காதலித்தது உன்னையல்ல; என் காதலன் அழகாக இருப்பான் என்று கூறியிருக்கிறார்.


இந்த சுவாரஸ்ய சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த பெண் கோவையைச் சேர்ந்தவர். அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். இருவரும் தங்களது முகநூல் பக்கத்தில் அப்லோடு செய்யும் படங்களைப் பார்த்து, லைக், ஹார்ட்டின் எல்லாம் போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


பேஸ்புக்கில் தொடங்கிய நட்பு, காதலாகி… வாட்ஸ்அப் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதலை வளர்க்க முடிவு செய்தனர். இதற்காக ஒரு இடத்தை முடிவு செய்துள்ளனர். வாலிபர் தனது ஆசை காதலியைப் பார்க்கும் ஆவலுடன் கோவைக்கு வந்தார். குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தனர். அப்போது மாணவி, வாலிபரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


நல்ல காதலுக்கு துணைபோன வாலிபர் வெட்டிக் கொலை


நான் பேஸ்புக்கில் பார்த்தது நீ அல்ல. அவன் அழகாக இருப்பான். அந்த முகம் வேறு என்று கூறி வாலிபரை அசிங்கப்படுத்தினார். ஆரம்பத்தில் நான்தான் உன்னோடு பழகிய காதலன் என்று கூறி சமாதானப்படுத்த முயன்ற வாலிபர், ஒரு கட்டத்துக்கு மேல் கோபமடைந்தார். நீ சொல்லித்தான் உன்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்தேன் என்று சண்டை போட ஆரம்பித்துள்ளார்.


வாலிபரும், கல்லூரி மாணவியும் சண்டை போடுவதைப் பார்த்த பொது மக்கள், சண்டையை விலக்க முயன்றனர். ஆனால் அவர்கள் சண்டையை நிறுத்தாமல் கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த வாலிபர், மாணவியை அடிக்கத் தொடங்கினார். இதையடுத்து பொதுமக்கள் வாலிபரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.


பொது மக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்ட போலீசார், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பிடிக்காத மாணவியை இனி தொந்தரவு செய்ய கூடாது என வாலிபருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் அந்த மாணவிக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

#faceboook #love #cheating #beautyapp