IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பேஸ்புக்கில் PORTAL VIDEO CALL வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

பேஸ்புக் நிறுவனமானது கடந்த 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் Portal Video Call வசதியினை அறிமுகம் செய்திருந்தது. இதற்காக விசேட சாதனங்களையும் அறிமுகம் செய்திருந்தது.

ஆரம்பத்தில் பெரிதும் பிரபலமடைந்திராத வசதியானது தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ஒரு நேரத்தில் 50 பேர் வரை வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை தற்போது பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

இதேவேளை ஏற்கணவே Messenger Room ஊடாக வீடியோ அழைப்பினை ஏற்படுத்தக்கூடிய உச்சபட்ச பயனர்களின் எண்ணிக்கையை 50 ஆக பேஸ்புக் மாற்றியிருந்தது. எவ்வாறெனினும் Zoom அப்பிளிக்கேஷனில் சாதாரணமாக 100 பயனர்கள் வரை வீடியோ அழைப்பினை ஒரே நேரத்தில் ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் Portal வசதி தொடர்பில் அறிந்துகொள்ள https://portal.facebook.com/ எனும் இணைப்பிற்கு செல்லவும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader