IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முகத்துக்கு போடும் பவுடரை டப்பா டப்பாவாக விரும்பி சாப்பிடும் பெண்

61

 

கடந்த 15 ஆண்டுகளாக டப்பா டப்பாவாக முகத்துக்கு போடும் பவுடரை விரும்பி சாப்பிடும் பெண் பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்குலாந்து நாட்டின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன். இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. இவர் தனது 5வது குழந்தை பிறந்ததற்கு பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக டப்பா டப்பாவாக முகத்துக்கு பூசும் பவுடரை சாப்பிட்டு வருகிறார். இந்த அதிசயமான பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.

இதற்காக லிசா இதுவரை 8,000 பவுண்டு இந்திய பத்திப்பில் ரூ7 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளார். அதிலும் லிசா விற்கு ஜான்சன் அனட் ஜான்சன் பவுடரை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். லிசா யாருக்கும் தெரியாமால் குளியலறைக்கு சென்று பவுடரை சாப்பிட்டு வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் லிசா பவுடர் சாப்பிடும் விவகாரம் தெரிய வந்துள்ளது. ஆனால் போதைக்கு அடிமையானது போல் பவுடருக்கு அடிமையாகி உள்ளார்.

லிசாவை அதில் இருந்து மீட்க முடியாமல் தவிக்கின்றனர் அவரது குடும்பத்தினர். பின்னர் மருத்துவரின் உதவியை நாடினர் லிசாவின் குடும்பத்தினர். அதற்கு மருத்துவர் இரும்பு சத்து குறைபாடு மற்றும் மேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.

பவுடரை அளவுக்கு அதிகமாக சுவாசித்தாலே உடலுக்கு கெடுதல், புற்றுநோய் வர வாய்ப்புண்டு. ஆனால் லிசா டப்பா டப்பாவாக பவுடரை சாப்பிடுகிறார். இதுவரை அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறுகிறார்கள்.

#face #powder #eating #women