IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மனைவியின் செல்போனை லாக் செய்த கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி! வைரல் வீடியோ

Get real time updates directly on you device, subscribe now.


செல்போன் இல்லையென்றால் உலகமே சுழலாது போன்ற சூழ்நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளோம். நடுரோடு என்று பாராமல் செல்போனை லாக் செய்த தன் கண்ட கணவனை அடித்து துவம்சம் செய்துள்ளார் பெண்மணி ஒருவர். இந்த சம்பவம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மனைவியின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர் பயன்படுத்தும் செல்போனை கணவன், அவருடைய முகத்திற்கு நேராக பார்த்தால் மட்டுமே லாக் ரிலீவாகும் பேஸ் லாக் செய்துவிட்டார். ஆனால் செல்போனை லாக் செய்துள்ளது மனைவிக்கு தெரியாது. அவர் எப்போதும் போல இயல்பாக செல்போனை உபயோகிக்க முயற்சித்துள்ளார்.


ஆனால் போன் அன்லாக் ஆகாத காரணத்தினால் மனைவி கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அதன்பின் இந்தமாதிரி வேலையை கணவரைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என்பதை அறிந்த அவர், கணவரின் முகத்தை பயன்படுத்தி போனை அன்லாக் செய்ய முயற்சித்தார். ஆனால் கணவரோ முகத்தை காட்ட மறுத்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த மனைவி, ஏன்யா இப்படி போனை லாக் செய்து முகத்தை காட்ட மாட்டேங்கிற ? எனச் சொல்லி சரமாரியாகத் தாக்கத் தொடங்கிவிட்டார். போனை அன்லாக் அக்லாக் எனச்சொல்லி மீண்டும் மீண்டும் முகத்தை காண்பிக்குமாறு முயற்சி செய்துள்ளார். ஆனால் கணவரோ அப்போதும் கூட முகத்தை காண்பிக்க மறுத்துவிட்டார்.


இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர், தன்மானம் மிக்க கணவர் முகத்தை காட்ட மறுத்துவிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
#FaceID #PhoneLock #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader