IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கண் நோய்களை குணப்படுத்தும் புரோக்கோலி

66

இந்தியாவில் பலரும் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறியாக புரோக்கோலி இருக்கிறது. இதை மக்கள் புரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர். புரோக்கோலியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அத்தகைய புரோக்கோலியை நாம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் .

புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது புரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளது.

புரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாது. இதில் நார்ச்சத்து, அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.

வாரத்திற்கு இரண்டு முறை புரோக்கோலி சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேருவதையும் தடுக்கிறது.

புரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.

#eye #diseases #Healing #broccoli