IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா!

Get real time updates directly on you device, subscribe now.

சிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் கண்காட்சி பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில் 25 நாடுகளைச் சேர்ந்த 1250-கும் மேற்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்க்கவுள்ளனர். இந்த கண்காட்சி டிசம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சிஐஐ எஸ்கான் 2019 என்பது தென் இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சி ஆகும். நாட்டில் உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் விதமான அடுத்த தலைமுறை கட்டுமான இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு உள்ளிடவை குறித்து இந்த கண்காட்யில் விளக்கப்படும்.

பெங்களூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி சுமார் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சீனா, ஜெர்மனி, இத்தாலி , தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 350-க்கும் மேல் அயல் நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். 5 நாள் கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

எக்ஸ்கான் 10-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உள்கட்டமைப்புத் துறையில் இருக்கும் பெண்களின் செயல்பாடுகளை கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சி, செயற்கை நுண்ணறிவு(AI), ஐஓடி (IoT), ரோபோடிக்ஸ், புத்தாக்க தொழில் முனைவ்ய், கூறுகள் மற்றும் பாகங்களுக்கான சிறப்பு பகுதி, வேலைவாய்ப்பு கண்காட்சி, குழந்தைகளுக்கான போட்டிகள். சிஇ இண்டஸ்டிரியின் கிரீன் ரேட்டிங் பின்னணியில் மரம் நடும் நாள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சிஐஐ நடத்தவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More