IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மாணவர்களுக்கு தேர்வு எழுத இடமில்லை

0 23

மாணவர்கள் தேர்வு எழுத இடம் இல்லாமல் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவத்தின் புகைப்பட காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு தேர்வறையில் போதுமான இடம் இல்லாததால், திறந்த வெளியில் அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய நிலையால் அங்கு சர்ச்சையை ஏற்பட்டது.

இந்த கல்லூரியில் 2,000 மாணவர்கள் மட்டுமே அமர இடம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் இந்த தேர்விற்குகாக 5,000 மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் தேர்வு பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது தேர்வு எழுத போதுமான அறைகள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.

தேர்வாணையம் மாணவர்களுக்கு போதுமான இடவசதி இருக்கிறதா என்று அறிந்த பின் கல்லூரிகளுக்கு தேர்வு நடந்த அனுமதி கொடுத்தால் இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் தவிர்க்கலாம் என தேர்வு எழுத வந்த மாணவர்கள் கருத்தை தெரிவித்தனர்.

#exam #students #outside