Guides வசதியினை விரிவாக்கம் செய்யும் இன்ஸ்டாகிராம்

Get real time updates directly on you device, subscribe now.

கடந்த மே மாதம் Guides எனும் புதிய வசதியினை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்திருந்தது. இந்த வசதியினை இதுவரை காலமும் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு பயன்படுததக்கூடியதாக இருந்தது.

எனினும் தற்போது குறித்த வசதியினை விரிவாக்கம் செய்து மேலும் பல உள்ளடக்கங்களை வழங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

இந்த வசதியின் மூலம் பயனர்கள் தாம் விரும்பிய கிரியேட்டர்கள், பொது நபர்கள், நிறுவனங்கள் மற்றும் பப்ளிஸ்சர்கள் மூலம் உருவாக்கப்பட்ட பரிந்துரைகள், டிப்ஸ் மற்றும் ஏனைய உள்ளடக்கங்கள் என்பவற்றினை இலகுவாக தேடிப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி முதல் Products, Place, மற்றும் Posts ஆகிய வகைகளையும் உள்ளடக்கியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் எழுத்துக்கள், புகைப்படங்கள், கேலரிக்கள் மற்றும் வீடியோக்கள் என்பனவும் அடங்கும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More