ஈஸ்வரன் டீசருக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் படக்குழுவினர்

Get real time updates directly on you device, subscribe now.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும் என விலங்குகள் நலவாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விலங்குகள் நலவாரியம் அனுப்பியுள்ள நோட்டீஸ் ஒன்றில் ’விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பாம்பு காட்சி பயன்படுத்துவது விதிகளுக்கு எதிரானது என்றும், விலங்குகள் நலவாரிய அனுமதியின்றி பாம்பு காட்சி பயன்படுத்தியது தொடர்பாக 7 நாட்களுக்குள் படக்குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் மற்றும் டீசரை சமூக வலைதளங்களில் உடனே நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More