IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பெண்கள் நலனுக்காக நிர்வாணமானேன்! வைரலாக பரவும் கிரிக்கெட் வீராங்கனை படம்!!

Get real time updates directly on you device, subscribe now.


நிர்வாணமாக போட்டோவுக்குப் போஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல்… அதற்கு அழகான விளக்கமும் கொடுத்து அசத்தியிருக்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர்.


கடந்த 2006ம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி மூலம் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானவர் சாரா டெய்லர். இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளி பங்கேற்று 300 ரன்களும், 126 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 4056 ரன்களும், 90 டி20 போட்டிகளில் பங்கேற்று 2177 ரன்களும் எடுத்துள்ளார்.


சமீப காலமாக சில பிரச்சினைகளால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை தவித்து வருகிறார் சாரா டெய்லர். அடுத்து நடைபெற உள்ள ஆஷஸ் டி20 தொடரிலும் சாராவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் அவ்வப்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சமூக நலன் சார்ந்த விசயங்களைப் பகிர்ந்து ரசிகர்களோடு எப்போதும் இணைந்தே இருக்கிறார்.


இந்த நிலையில் அவசரமான இந்த உலகில் மக்களிடையே பணி நிமித்தமாகவும், குடும்ப சூழல் காரணமாகவும் மனக் கவலை மற்றும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. அப்படிப் பட்ட மன அழுத்தம், மனக்கவலையில் இருந்து வெளிவருவது குறித்த விழிப்புணர்வுக்காக ஒரு இதழுக்கு சாரா பேட்டியளித்துள்ளார். இதற்காக அவர் கொடுத்திருக்கும் புகைப்பட போஸ்தான் இப்போது ஹாட் ட்ரெண்ட்டாக மாறியிருக்கிறது.


உடலில் ஒட்டுத் துணி இல்லாம, நிர்வாணத்துடன் விக்கெட் கீப்பராக நிற்பது போல் அந்த புகைப்படம் உள்ளது. அவருக்கு முன்னே கிரிக்கெட் ஸ்டெம்பும் உள்ளது. இந்த படத்தை சாரா டெய்லர் தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுருக்கிறார். படத்திற்கு எக்கச்சக்க ஆதரவு வரும் அதே வேளையில், படத்திற்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கம் ரொம்பவே அழகானது என்று பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.


அப்படி அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் சாரா? என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த படம் முதலில் கூச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான், என்று சாரா டெய்லர் விளக்கம் அளித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader