IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரனோ குறித்து அரசு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக முதல்வர் பழனிச்சாமி, மாவட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசணை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், இன்று 67 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அவர் பேசுகையில், 25 லட்சம் என்-95 ரக முகக்கவசங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 1.5 கோடி சாதாரண முகக்கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளுக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களில், இன்னும் 121 பேரின் ஆய்வு முடிவுகள் வரவேண்டியுள்ளது. எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடியாது. அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால், கொரோனாவுக்கு தற்போது இருப்பது ஒரே தடுப்பு மருந்து, மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுதான். வீட்டு வாடகைதாரர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader