IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவு இல்லமாக்க அவசர சட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

அதிமுகவின் பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா 2016ம் ஆண்டு மறைந்தார். சென்னையில் அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2017ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினரான தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது.

இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader