IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆம்லெட் ருசிக்க…. வடை சுவைக்க……

egg and vadai

Get real time updates directly on you device, subscribe now.


பெண்கள் தங்களுக்கு தெரிந்த பதார்த்தங்களை தினம் தினம் விதவிதமாக சமைத்தாலும் புதிது புதிதாக தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். புதுமையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ளும் அதேநேரம் அத்தியாவசியமான 25 சமையல் டிப்ஸ்களை இங்கே காணலாம்.

  • உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய கிழங்கு மீது சிறிது பயத்தம் மாவு தூவி விட்டுப் பொரித்தால் சுவை அதிகரிக்கும்.

  • சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரிசியில் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.

  • இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையாக இருக்கும்.

  • பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும் அல்லவா? அதன் மீது லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.

  • தோசை மாவு புளித்துப் போனால் அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் புளிப்பு காணாமல் போய் விடும்.

  • கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தாவாவில் புரட்டி எடுத்து மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லேட்டின் சுவை கூடும்.

  • பூசணி அல்வா செய்யும் போது பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு செய்தால் அல்வா பொலபொலவென அருமையாக வரும்.

  • கேஸ் ஸ்டவ்வை சமையல் முடித்து ஆறியபின் சுத்தமாகத் துடைத்து நியூஸ் பேப்பரால் துடைக்க பளிச்சென மின்னும்.

  • துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் சமைக்கும் போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

  • ஆம்லெட் செய்யும் போது சிறிது வெண்ணெயையும் முட்டையில் நன்றாகக் கலக்கி செய்து பாருங்கள். கூடுதல் சுவை கிடைக்கும்.

  • குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எழுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வத்தால் அப்போது பறித்தது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

  • பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

  • சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.

  • சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது. நீர்த்தும் போகாது.

  • ஆம்லேட் செய்ய முட்டையை அடிக்கும் போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆம்லேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

#Egg #Vadai

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader