இனி டாக்டர் எடப்பாடியார்! கலக்குறார் முதல்வர் பழனிச்சாமி!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பட்டம் என்பது பல்வேறு துறைகளில் சாதித்த மற்றும் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு இதுபோன்ற டாக்டர் பட்டம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 20ம்தேதி டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்த கௌரவ டாக்டர் பட்டம் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வழங்கப்படுகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More