IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி! – உற்சாகமாக கொண்டாடும் திமுக தொண்டர்கள்

107


தமிழக அரசு சார்பாக வெளிநாடுபயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்த திமுக தொண்டர்கள் தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


14 நாட்கள் அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 28ம் தேதி தனது பயணத்தை தொடங்கினார். முதலில் இங்கிலாந்திற்கும் பின்பு அமெரிக்காவிற்கும் சென்றார்.


அங்கு தமிழ் சேர்ந்த அமைப்புகளையும், தமிழ்வாழ் மக்களையும் சந்தித்த பின், உலக தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த முதல்வர் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில்துவங்க சாதகமான சூழல் இருப்பதாக எடுத்துரைத்தார். முதல்வருடன் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயக்குமார், எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் கோபால் ஆகியோரும் சென்றனர்.


முதலில் இங்கிலாந்து சென்ற முதல்வர் அங்குள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள், கால்நடை பூங்காக்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். லண்டன் சென்ற முதல்வர் மருத்துவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.


உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் குறித்து அறிவதற்காக பல்வேறு அமெரிக்க கால்நடை பண்ணைகளுக்கு முதல்வர் சென்று பார்வையிட்டார். அதன் ஒருபகுதியாக நியூயார்க் மாகாணம் பஃப்பலோ நகரிலுள்ள ‘லாம்ப்ஸ்’ கால்நடைப் பண்ணைக்குச் சென்றார். அங்கு மேற்கொள்ளப்படும் உயர் தொழில்நுட்ப கால்நடை வளர்ப்பு குறித்து விசாரித்த முதல்வருக்கு லாம்ப்ஸ் கால்நடைப் பண்ணை அதிகாரிகள் அங்கு உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து முதல்வருக்கு விளக்கமளித்தனர்.


அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் நியூயார்க் சான் ஹீசே நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில் தொழில் துவங்க 16 தொழில் நிறுவனங்கள் மற்றும் மூன்று ஐடி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதையடுத்து 2ஆயிரத்து 300கோடி ரூபாய் அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் பழனிச்சாமி கையெழுத்திட்டனர்.


அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுபயணம் முடித்துக் கொண்டு துபாய் சென்ற முதல்வர் அங்கு நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.


முதல்வர் பழனிச்சாமி 14 நாட்கள் அரசு சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். வெளிநாடு பயணம் குறித்து முதல்வர் பேசும்போது, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உற்சாக வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார்.


இந்நிலையில் முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து எதிர்கட்சித் தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, முதல்வர் பழனிச்சாமி ஒரு விவசாயி, அவர் முதன் முதலில் கோட்சூட் அணிந்து செல்கிறார். முதல்வர் வெளிநாடு போகட்டும் அல்லது போகாமல் இருக்கட்டும். வெளிநாட்டு முதலீடுகள் நாட்டு மக்களுக்காகவா, அல்லது முதல்வருக்காகவா என தெரியல என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி நான் வெளிநாடு செல்வது அனைவருக்கும் தெரிவித்து வெளிப்படையாகத்தான் செல்கிறேன் என்று பதிலளித்திருந்தார்.


இந்த நிலையில் தமிழக முதல்வர் சென்னை திரும்பியிருப்பதால் உண்மையிலேயே மக்களுக்காக வெளிநாடு முதலீடுகளை கவர்ந்திருப்பதால் கண்டிப்பாக திமுக சார்பில் பெரிய பாராட்டு விழாவே நடத்துவோம் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


எதிர்கட்சி என்று பாராமல் முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து பாராட்டுவிழா நடத்துவோம் என்று ஸ்டாலின் கூறுவது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலை தமிழகத்தில் நடைபெறுகிறது என்று எண்ணும் போது மனதிற்குள் அமைதியையும் சந்தோசத்தையும் ஏற்படுத்துவதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.