தமிழக முதல்வராவேன் என பழனிச்சாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், அதிசியம் நேற்று, இன்றும் மட்டுமல்ல நாளையும் நடக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று, மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘கமல் 60’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைத்துறையுணர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் ரூ. 1 கோடியை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், “முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது, இன்று நடக்கிறது, நாளையும் நடக்கும்” என கூறினார்.
கமலும் நானும் வெவ்வேறு இடத்துக்கு சென்றாலும், எங்களது சித்தாந்தம், கொள்கை மாறினாலும் எங்களது நட்பு எப்போதும் போல் தொடரும். எங்களது பெயரை வைத்துக் கொண்டு ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ள கூடாது என ரஜினிகாந்த் விழாவில் பேசினார்.
#KamalHassan #Kamal60 #Rajinikanth #EdappadiPalanisamy #In4Net