IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மின்கட்டணம் வசூலிப்பு கண்டித்து திமுகவினர் போராட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் மின்கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக கூறி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் லாக்டவுன் நேரத்தில் வீடுகளின் மின் கட்டணத்தில் அதிகமாக வசூலிப்பதாக கூறி குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து 21ம் தேதி திமுக சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இல்லத்தின் முன்பு கருப்பு கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சிஐடி காலனியில் உள்ள வீட்டின் முன்பு தி.மு.க. எம்பி கனிமொழியும், அண்ணா அறிவாலயத்தில் தயாநிதி மாறனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்டியில் உள்ள வீட்டில் துரைமுருகன் மற்றும் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் தடையை மீறி மின்வாரிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader