IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பன்னீர்

100

நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு அனைத்து சத்துக்களும் தேவைப்படுகிறது. அவ்வகையில் புரோட்டீன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புரோட்டீனை நாம் சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டிலும் இருந்து பெறுகிறோம்.

சிலர் தங்களின் உணவில் பன்னீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பன்னீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது. இன்றைய இளைஞர்களின் உணவுகளில் அதிமுக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு என்றால் அது பன்னீர்தான். இதன் நன்மைகளை பற்றி பார்க்களாம்.

பன்னீர் சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது. இளைஞர்கள் பலரும் சருமம் ஆரோக்கியமாக இருக்க அதிக செலவு செய்கிறார்கள். ஆனால் பன்னீர் இந்த வேலையே மிகசுலபமாக செய்யக்கூடியது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் செலேனியம் சரும பொலிவை அதிகரிக்கும்.

Related Posts
1 of 3

பன்னீரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கிறது. இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் பன்னீர் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது குறைகிறது. இது ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கிறது.

காலை நேரங்களில் பன்னீர் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும். இரவு நேரங்களில் சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும். உடல் மெலிந்து பலஹீனமாக இருப்பவர்கள் தாரளமாக சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.

#Eating #Paneer #increases #hemoglobin #level