IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உடல் எடையை குறைக்க கொள்ளு சாப்பிடுங்க

111

கொள்ளு அதிக ஆற்றலையும், வலிமையையும் வழங்கக்கூடிய பயறு ஆகும். ஆதனால் தான் இதனை குதிரைகளுக்கு உணவாக அளிக்கின்றனர். எனவே இது ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.

கொள்ளில் கால்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புசத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பாஸ்போரோஸ், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் இளைக்க வேண்டும் என விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளினை சேர்த்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் காண முடியும்.

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

காலையில் வெறும் வயிற்றில் கொள்ளினை உண்பதால் செரிமானப்பாதையை செரிமானத்திற்கு தூண்டி செரிமானம் நன்கு நடைபெற வழிவகுக்கிறது. இயற்கையாகவே கொள்ளுக்கு இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு. அதனால் உங்களுக்கு நீரிழிவு போன்ற நோய் ஏற்படாமல் தடுக்கும்.

மூல நோய் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு கொள்ளினை ஊறவைத்து உண்டு வந்தால் உங்களுக்கு மூல நோய் விரைவில் குணமடையும். குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி குணமாகும்.

கொள்ளு ரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

#eating #gram #Reduce #body #weight