IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

107

ஒரு முட்டையில், சுமார் 6 கிராம் புரதச்சத்து இருக்கிறது. சத்து நிறைந்த முட்டையை தினமும் சாப்பிடுவது நல்லது. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல.

குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுக்க வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக அவர்களுக்கு மஞ்சள் கருவை கொடுக்கலாம். முட்டை உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

முட்டையில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் நிறைந்திருப்பதால், எலும்புகளை வலுப்பெறச்செய்கிறது. முட்டை சாப்பிடுவதன் மூலம், உடலில் நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். இதனால், வலிப்பு நோய், இதயம் தொடர்பான நோய் வராமல் தடுக்கலாம்.

முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முட்டைகளை பச்சையாக குடிக்கக்கூடாது. அது பாக்டீரியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வேக வைத்த முட்டையை சாப்பிடலாம்.

உடலில் தலைமுடி மற்றும் நகங்கள் உணவில் இருந்து பெறப்படும் புரதத்தில் மெலனின் எனும் புரத பொருளை அதிகம் பயன்படுத்தியே வளருகிறது. நாட்டு கோழி முட்டையில் மெலனின் புரத சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி நாட்டு முட்டை சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி உதிர்வு, நகங்கள் உடைவது போன்ற புரத சத்து குறைப்பாட்டால் ஏற்படும் பிரச்சனை நீங்கும்.

#eating #Egg #Benefits