23.1 C
Munich
Tuesday, August 9, 2022

பிரம்மாண்டமான ராட்சத தலைகள் கொண்ட ஈஸ்டர் தீவு

Must read

சிலி நாட்டில் பொலினேசியன் என்ற தீவிற்குள் இந்த ஈஸ்டர் தீவு அமைந்துள்ளது. இந்த தீவின் அதிசியம் என்னவென்றால் வித்தியாசமான முக அமைப்பு கொண்ட பெரிய பெரிய பிரம்மாண்டமான சிலைகள் உள்ளது.

1722ல் டச்சு ஆராய்ச்சியாளரான ஜாக்கப் ரத்வின் என்பவர் இங்கு ஆராய்ச்சி புரிய வந்துள்ளார். வந்து இறங்கியவுடன் இங்குள்ள வித்தியாசமான பிரம்மாண்டமான சிலைகளை பார்த்து வியந்துள்ளார். அதன்பிறகு இதனை இந்த உலகிற்கும் அறிவித்துள்ளார்.

முதல்கட்ட ஆராய்ச்சியில் வித்தியாசமான விசித்திரமான நிறைய விசயங்கள் தெரியவந்துள்ளது. அதாவது அங்குள்ள சிலைகள் அனைத்தும் மூவாய் சின்னங்கள். இது நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு உள்ளது என கண்டுபிடித்துள்ளார்.

அந்த தீவிற்கு முதலில் பெயர் இல்லாமல் இருந்துள்ளது. அதன்பிறகு ஜாக்கப் ரத்வின் ஈஸ்டர் தினத்தில் ஆராய்ச்சி புரிய இந்த தீவிற்குள் நுழைந்தனால் அதற்கு ஈஸ்டர் தீவு என பெயரிட்டுள்ளார்.

வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இங்கு தீவிரமாக ஆராய்ச்சி செய்த போது கிபி 300ல் பழங்குடி மக்கள் அங்கு குடியிருந்ததாக கண்டுபிடித்துள்ளனர். அதுவும் நாகரீகததுடன் வாழ்ந்துள்ளனர்.

இங்கு ஆராய்ச்சிக்காக நிலத்தை தோண்டும் போது பழங்குடி மக்களின் எலும்புகள் கிடைத்துள்ளது. இது ராப்பா மோயி எனும் என்கிற பழங்குடி மக்களின் எலும்புகள் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். கிபி 1200 வரை அந்த இன மக்கள் அங்கு வாழ்ந்துள்ளனர்.

ராப்பா மூயி மக்கள் கிபி 7வது நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் கடல் வழியாகவே கிட்டத்தட்ட 1000 மைல்கள் கட்டுமரத்தின் மூலம் கடந்து இந்த ஈஸ்டர் தீவிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

1000 வருடங்களுக்கு முன்பு அங்கு விவசாயம் நடைபெற்றிருக்கிறது. பல நூறு வீடுகள் இருந்திருக்கிறது. 12000 பேர் கூட்டமாக இங்கு வசித்திருக்கலாம் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

அப்போது வாழ்ந்த மக்கள் மூவா என்கிற பிரம்மாண்டமான சிலைகளை வடிவமைத்து அதனை வணங்கி வந்துள்ளனர். இந்த கல் சிலைகள் ஒவ்வொன்றும் 10மீ உயரமும் 80 டன் எடையும் கொண்டுள்ளது.

இந்த பிரம்மாண்டமான சிலைகளை செய்வதற்காக வேறு இடங்களிலிருந்து நகர்த்திக் கொண்டே வந்துள்ளனர். அதை நகர்த்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி இந்த பிரம்மாண்டமான சிலைகளை நகர்த்தி கொண்டு வந்துள்ளனர்.

சரியான வடிவத்தில் இயந்திரங்கள் மூலம் கட் பண்ணியது போன்று அந்த காலத்திலேயே மிகப்பிரம்மாண்டமான சிலைகளை உருவாக்கியது தான் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு வடிவத்தில் இருப்பதுதான் அதன் சிறப்பு.

மிகப்பெரிய மழை மற்றும் வெள்ளம் இங்கு ஏற்பட்டதனால் அந்த இடமே அழிந்துவிட்டதாகவும் மிச்சம் இருந்த மக்கள் வேறு ராஜ்ஜியத்திற்கு அடிமைகளாக சென்று விட்டதாகவும் என்று கூறி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article