IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..?

Get real time updates directly on you device, subscribe now.

திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் மக்களவைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது உடல்நலம் சரியில்லாமல் போனதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதன்பின் மீண்டும் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நலம் சரிவராத காரணத்தினால் மீண்டும் கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் சிறிது உடல்நலம் தேறியவுடன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று மீண்டும் கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 81 வயதாகும் துரைமுருகன், வயது முதிர்வு மற்றும் உடல் சோர்வு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader