IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சருமம் வறட்சியா இருக்கா ? அப்போ இத டிரைப்பன்னுங்க

Get real time updates directly on you device, subscribe now.

 

பொதுவாக சருமத்தில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கவேண்டும். அவை குறையும் பட்சத்தில் சருமம் வறட்சியாக இருக்கும். சிலருக்கு எண்ணெய் பசை சருமமாக இருக்கும் . அவர்களுக்கு சருமத்தில் வறட்சி உண்டாகாது என்று சொல்ல முடியாது. எண்ணெய் பசையுள்ள சருமம் அதிக வறட்சியை சந்திக்கவே செய்யும். இவை எல்லா காலங்களிலும் இருக்கும். குறிப்பாக பனிக்காலத்தில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

இந்த சூழலில் என்ன மாதிரியான மேக்கப் செய்தாலும் அவை முகத்துக்கு எடுபடாது. மேக்கப் செய்த சில நேரங்களில் அவை பொலிவிழந்து போகவும் வாய்ப்புண்டு. இத்தகைய சருமத்தைக் கொண்டிருப்பவர்கள் பனிக்காலங்களில் கூடுதலாக சருமத்தை பராமரிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்க கூடியது. நன்றாக பழுத்த வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி அதனுடன் பாதாம் ஆயில் அல்லது வைட்டமின் இ ஆயிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக க்ரீம் பதத்துக்கு அரைக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவி சுத்தமாக உலரவைத்து துடைத்து இந்த க்ரீமை கொண்டு மசாஜ் செய்தபடி முகம், கழுத்து,கை, கால் பகுதிகளில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான சூட்டில் கழுவிய பின்னர் மெல்லிய டவல் கொண்டு முகத்தை அழுத்தி துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

சரும பராமரிப்பு மட்டும் போதுமானதா இல்லை. அதோடு சருமத்துக்கும் உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டும். அதனால் இந்த பராமரிப்போடு தண்ணீர் அதிகம் குடிப்பதையும் மறக்காமல் செய்ய வேண்டும். பனிக்காலத்தில் தாகம் எடுக்காது என்றாலும் வேண்டிய அளவு தண்ணீர் பருகினால் தான் சருமம் அதிக வறட்சியாகாது. இந்தக்காலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள், காரம், மசாலா நிறைந்த உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

 

#dry #skin #face #pake

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader