IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

குடியால் வந்த வினை! நண்பனை அடித்துக் கொன்று, எரித்த நண்பர்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

திருச்சி கல்லுக்குழியில் நண்பர்கள் சேர்ந்து மது போதையில் ஒரு நண்பரை அடித்து கொலை செய்து அவரை எரித்து விட்டனர். இதனால் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் தமிழழகன் (வயது 24). இவரது நண்பர்கள் நவல்பட்டு ஜெகன், பொன்மலை பகுதியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் மணிகண்டன். தமிழழகன் கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதனால் பயந்துபோன பெற்றோர்கள், இது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தனர்.


இந்நிலையில் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தமிழழகன் திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள நண்பன் ஜெகன் வீட்டிற்கு அன்றைய தினம் சென்றது தெரிய வந்தது. அதன் பின்னரே செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ஜெகனிடன் விசாரணை நடத்தச் சென்றனர். அவர் வீட்டில் இல்லாததால் நண்பர்கள் கார்த்தி மற்றும் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தன்று மணிகண்டன், கார்த்திக் ஆகியோருடன் தமிழழகன் நவல்பட்டில் உள்ள ஜெகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஜெகனின் வீட்டில் 4 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர், அப்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து தமிழழகனை அடித்துக்கொலை செய்திருக்கின்றனர். பின்னர் ஜெகனின் ஆட்டோவில் தமிழழகனின் உடலை எடுத்து வந்து பொன்மலை அருகே உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெகன் தலைமறைவாகி இருக்கிறார்.


மேலும் மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கணேசபுரம் பகுதியில் எரிந்த உடலை போலீசார் தேடி வருகின்றனர். உண்மையில் தமிழழகன் எந்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும் ஜெகனை பிடித்து விசாரித்தால் மட்டுமே தெரியும் என்று போலீசார் கூறினர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader