IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முருங்கையின் மருத்துவ பயன்கள்

Get real time updates directly on you device, subscribe now.

முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. முருங்கைகாயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் A,C போன்ற சத்துகள் உள்ளது. முருங்கை கீரையில் கொழுப்பு, புரதம், தாதுக்கள், விட்டமின்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

முருங்கை காயை தொடர்ந்து நமது உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. முருங்கைக்காயை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல், மூட்டு வலி குணமாகும்.

வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது. தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டைபுண் ஆகியவற்றை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றில் இருக்கும் புழுக்களுக்கு எதிராக முருங்கைகாய் செயல்படுகிறது.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடித்தால் நல்லது.

முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

 

#drum #stick #benefits

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader