IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இதுதான் லேட்டஸ்ட் டெக்னிக்காம்! சவப்பெட்டிக்குள் வைத்து கஞ்சா கடத்தல்!

19

சவப்பெட்டிகளில் பெட்டி மூலம் கஞ்சா கடத்தியவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதை பொருட்களை ஒழிப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதனால் வாகன சோதனைகள் தீவிரமாக நடத்தப்படுகிறது.


அங்குள்ள சான்டான்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த காரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரில் 2 சவப்பெட்டிகள் இருந்துள்ளது. அதனை போலீசார் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சவப்பெட்டிக்குள் 300 கிலோ கஞ்சா சிறுசிறு பொட்டலங்களாக இருந்துள்ளது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தியவர்களையும் கைது செய்தானர். மேலும் கஞ்சா கடத்தல் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.