IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பெண்களின் சுதந்திரத்தை பறிக்காத ஆடை போதும்!!

Get real time updates directly on you device, subscribe now.


பெண்கள் அணியும் உடைகள் குறித்து சமீபகாலங்களில் விவாதங்கள் தலை தூக்குகின்றன. பாலியல் வன்முறைகளுக்கு பெண்களின் உடைகளே காரணமாக அமைந்து விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நமது பாரம்பரிய உடைகளும், இன்று, நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டு, புது, புது டிசைன்களில் வடிவமைக்கப்படுகின்றன.


“செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேலை உடுத்த தயங்கிறியே…’ என்ற வரிகள் மனதை கவர்ந்தாலும், அரக்க, பரக்க வேலைக்கும், கல்லூரிக்கும் கிளம்பும் பெண்களுக்கு தற்காலத்தில் சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.


கல்லூரி மாணவியர், இனி, சேலை, சுடிதார் மட்டுமே அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனரகம் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது.


மாணவியர் மத்தியில், 12ம் வகுப்பு வரை, சீருடை மட்டுமே அணிந்த நிலையில், பட்டாம் பூச்சிகளால், கலர் கலராய், விதவிதமாய் உடை உடுத்த தடையா? அடுத்தவர் உடை விஷயத்தில் அரசு தலையிடுவதா என்ற எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.


சுதந்திரம் என்பது அவரவர் விஷயமாக இருந்தாலும், அடுத்தவர்களை பாதிக்கும் வகையில் அமைந்தால், அது யார் குற்றம் என சமூகத்தின் மீதும் ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.


ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இவ்விஷயம், உடையும், ஆபாசம் என்ற இணை கோடுகளாகவே வருகிறது. உலகத்துக்கே பேஷன் உடைகளை தயாரித்து வழங்கும், திருப்பூரில் இதுகுறித்து கருத்து கேட்க களமிறங்கினோம்.


மண்ணுக்கான கலாசார உடைகளையும் பெண்கள் விட்டுத்தராத நிலையில், அதற்கான சுதந்திரத்தை பாதிக்கும் விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. உடைகள், அவரவர் விருப்பத்தை பொருத்தது என்றாலும், தங்கள் குழந்தைகள் விதம், விதமாக உடை அணிந்து செல்லும் போது, பெற்றோருக்கு ஆபாசம் தெரியாது.


ஆனால், பொது இடங்களுக்கு வரும்போது, பார்ப்பவர் கண்களுக்கு அதே குழந்தைகள் வேறு கண்ணோட்டமாக தெரியாமலா இருப்பார்கள் என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர்.


உடை விஷயம் ஆபாசம் இல்லாததாகவும், பெண்களுக்கு சிரமம் கொடுக்காததாகவும் இருக்க வேண்டும் என்பதே பலத்த கருத்தாக அமைந்துள்ளது.


மாடர்ன் உடைகளை விட, கேஷூவல் உடைகள் மிகவும் சரியானதாகும். நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தாவணி, சேலையில் இருந்து, சுடிதாருக்கு மாறியுள்ளோம்; அவ்வளவுதான். அதற்காக, ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற உடைகள் நமது சூழ்நிலைக்கு ஏற்றதல்ல; மாடர்ன் உடைகளால், பெண்களுக்கு சிரமமே அதிகரிக்கிறது; சுடிதார் சரியானது.

மக்கள் கருத்துகள்:


நாகரிக வளர்ச்சியில் உடையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெண்கள் உடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நாகரிக உடைகள், பாலியல் குற்றங்களை பெருகச்செய்யும் வகையில் அமைந்து விடக் கூடாது.


பேஷன் உடைகள், பெண்களுக்கு மேலும் அழ கூட்டுவதாக அமைய வேண்டுமே தவிர, அங்கங்களை எதிரொலிப்பவையாக அமைந்து விடக்கூடாது. கலாசார சீரழிவுக்கு வழி வகுக்காத வகையில், உடை கட்டுப்பாடு அவசியம். ஆனால், சுதந்திரத்தை, சவுகரியத்தை பறிக்கும் கட்டுப்பாடாக இருக்கக் கூடாது.


உடை விஷயத்தை வீட்டுக்குள் இருந்தே துவக்க வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு எது தேவை என்பதை உணர்த்த வேண்டும். பாலியல் குற்றங்களும், பிரச்னைகளும் உருவாக்குவதாக அமைந்து வருகிறது.


உடைகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. மேல்நாட்டு நாகரிகங்களை பார்த்து நாம் வளரக்கூடாது; நமது கலாசாரம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


கலாசார உடைகள் என்பதே சரியானதாக இருக்கும். படிக்கச் செல்லும் மாணவியருக்கு, மற்றவர்களை, ஆண்களை கவரும் உடைகள் அவசியமானதா என்பதை உணர வேண்டும்.


சினிமா, “டிவி’ சீரியல், இன்றைய கால பெண்களை அடிமைப்படுத்தி வருகிறது. இது சரிதானா என்பதை அவர்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.


கட்டுப்பாடு அவசியமானது தான். கற்பழிப்பு குற்றங்கள் இருக்காது. உடைகள் சரியாக இருந்தால், எந்த பிரச்னையும் இருக்காது. இதுவரை எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை.


நாகரிக வளர்ச்சியால் அதிகரிக்கும் பிரச்னைகளை உணர்ந்தே, சட்டங்கள் கொண்டு வரவேண்டியுள்ளது. இதற்கு காரணம் பெண்களே. ஆபாசம் இல்லாத, தங்களுக்கு பிடித்த உடைகளை அணிவதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.


சுடிதார் போன்ற மாடர்ன் உடைகள் பெண்களுக்கு சவுகரியமானதாக உள்ளது என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில், ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் என மாறும்போது எதிர்ப்பு கிளம்புகிறது.


மாடர்ன் உடைகளால் பெண்களுக்கு நன்மை யும் இருக்கு; தீமையும் இருக்கு. பார்க்கும் பார்வையில் அசிங்கம் உள்ளது. சமூகத்தின் நிலை அறிந்து, கலாசாரத்தை சீரழிக்காத உடைகள் அணியலாம்.


மாடர்ன் உடைகளை விட, கேஷூவல் உடைகள் மிகவும் சரியானதாகும். நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தாவணி, சேலையில் இருந்து, சுடிதாருக்கு மாறியுள்ளோம்; அவ்வளவுதான்.


அதற்காக, ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற உடைகள் நமது சூழ்நிலைக்கு ஏற்றதல்ல; மாடர்ன் உடைகளால், பெண் களுக்கு சிரமமே அதிகரிக்கிறது; சுடிதார் சரியானது.


சேலை உடுத்துவதில் மிகவும் சிரமம் உள்ளது. அங்கங்கள் வெளியே தெரியும் வகையில் அமைந்துள்ளது. அடிக்கடி சரி செய்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது; சுடிதார் சரியானது. அதனால், எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை; கையாளுவதும் எளிது. அதற்குமேல், மாடர்ன் டிரஸ்கள் அவசியம் இல்லை.


விருப்பப்பட்ட உடைகளை அணிவதில் பெண்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு மாடர்ன் டிரஸ் தேவையில்லை. அணிவதற்கு எளிதாக இருப்பதால், பிரச்னைகள் இல்லாத சுடிதார் சரியானது. மாடர்ன் உடைகளே பல பிரச்னைகளை உருவாக்குகின்றன.


பெண்களின் மனதை பொருத்தது உடைகள் விஷயம். மாடர்ன் உடைகள் அணிவது அவர்கள் விரும்பம்; வெளிநாடுகளில் மாடர்ன் உடைகள் சரியானதாக இருக்கும்.


இங்கு அது தேவையா என்று யோசிக்க வேண்டும். பெண்களுக்கு சவுகரியமான உடைகளை அவர்கள் அணிந்து கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More