10.1 C
Munich
Monday, October 3, 2022

பாண்டவர்கள் ஐவருக்கு முன் திரௌபதிக்கு 14 கணவர்களாம்! ஆச்சரியப்பட வைக்கும் சில மர்மமான தகவல்

Must read

மகாபாரத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களின் மத்தியில் மிகவும் முக்கிய நபராக கருதப்படுவது திரௌபதி மட்டுமே. அவருக்கு அதிகம் அறிமுகம் தேவைப்படுவதில்லை. மேலும் பாரதப் போர் நடைபெறுவதற்கான முக்கிய காரணியாகவும் திரௌபதி இருந்தார்.

அவர் மனித உடலின் ஐந்து சக்கரங்கள் பிணைப்பதைக் குறிக்கும் அறிகுறியாகவும் திரௌபதி விளங்கினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் மனிதர்களின் உடம்பில் உள்ள முதுகெலும்பில் இருக்கும் குல குண்டலினியாகக் கருதப்படுகிறார். மேலும் திரௌபதி பற்றிய சில ஆச்சரியபட வைக்கும் தகவல்களை இங்கு காண்போம்.

பாண்டவர்களின் மனைவிகளில் சிறந்த மனைவியாக கருதப்படும் திரௌபதிக்கு பல பெயர் உள்ளது. அதில் பாஞ்சாலி, மகாபாரத, யஜ்னசேனி, சைரந்திரி என்பனவாகும்.

திரௌபதிக்கு தனது முந்தைய பிறப்பில் 14 திறமையான குணங்களைக் கொண்ட கணவனை திருமணம் செய்ய கேட்டதாக கதை உண்டு. அதற்கு சிவபெருமான் வேண்டிய வரத்தை அளித்தார். ஆனால் அவர் வேண்டியவாறு 14 குணங்களையும் கொண்ட ஒரு மனிதர் உலகில் எங்குமே இல்லை.

அதனால் ஐந்து சிறந்த தகுதிகளைக் கொண்ட ஒருவரை மணக்க சிவபெருமானிடம் திரௌபதி வேண்டினார்‌. அவ்வாறு தர்மம், வலிமை, வில்வித்தை திறன், நல்ல தோற்றம், பொறுமை என ஐந்து தகுதிகளைத் தனித்தனியாகக் கொண்ட ஐந்து ஆண்களைத் திருமணம் செய்து கொள்வாய் என வரமளித்தார்.

பண்டைய கால பண்பாட்டில் திரௌபதி மிகவும் தைரியத்துடன் எதற்கும் அஞ்சாமல் நேரடியாக பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அவர் அஷ்தினாபுரத்தில் அவமதிக்கப்பட்ட போது அரசர் திருதராஷ்ட்டிரனிடம் நேரடியாக நீதி கேட்டார். அவர் ரைசந்திரியாக பணிப்பெண்ணாக மறைந்து வாழும் காலத்தில் விராத் நாட்டு அரசனின் மைத்துனரால் அவமதிக்கப்பட்ட போது அவர் நேரடியாகவே அந்த நாட்டு அரசரிடம் நீதி கேட்டார்.

ஒரு பெண்ணை பாதுகாக்க தவறியதற்காக அந்த இரண்டு நாட்டு அரசர்களையும் துணிச்சலாக கண்டித்துள்ளார். அஷ்தினாபுரத்தில் ராஜ சபையில் தன் துகில் உரிக்கும் நிகழ்வின் போது ஆண்களுக்கு மத்தியில் தான் அவமானப்பட்டதிலிருந்து தன்னை காப்பாற்ற தவறியதற்காக பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியர் மற்றும் தன்னுடைய கணவர்களையும் அவர் கண்டித்தார்.

திரௌபதி பெற்றோர்கள் அரவணைப்பில் வளரும் ஒரு குழந்தையாக பிறக்கவில்லை. அவர் தீயவர்களை அழிக்கும் சக்தியாகவே வளர்க்கப்பட்டார். பாஞ்சாலி தேசத்தின் மன்னர் துருபாதர் திரௌபதியைக் குருவின் குடும்பத்தை அழிப்பதற்காக உருவாக்கினார். துரோணர் தனது மாணவர்களான கௌரவர்களையும் பாண்டவர்களையும் பயன்படுத்தி பாஞ்சால தேசத்தைப் பிரித்தார். அதனாலே அநீதி விளைவித்த கௌரவர்களை அழிக்கும் சக்தியாக விளங்கினார்.

தென்னிந்திய மக்களின் நம்பிக்கை படி கொடிய அரக்கர்களையும் தீமை விளைவிக்கும் அரசர்களையும் அழிக்கும் கிருஷ்ணருக்கு உதவி செய்யும் மகாகாளியின் அவதாரமாக திரௌபதி கருதப்படுகிறார். அதனால் தான் நெருப்பிலிருந்து திரௌபதி வந்தாலும் சகோதர சகோதிரியாக கருதப்படுகிறார்கள்.

அஷ்தினாபுரத்தில் திரௌபதியின் துகில் உரிக்கும் நிகழ்விலிருந்து முனிவர் துர்வாசர் அவரைக் காப்பாற்றினார் என்ற சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. திரௌபதியின் மீட்புக்கு முனிவரின் வரமே காரணம் என சிவ புராணம் குறிப்பிடுகிறது.

ஒருமுறை கங்கையில் முனிவர் நீராடும் போது அவருடைய இடுப்பு துணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. உடனே திரௌபதி தன்னுடைய ஆடையிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து முனிவருக்கு வழங்கினார். எனவே முனிவர் அவருக்கு வரத்தை வழங்கினார். இந்த வரம் துச்சாதனன் திரௌபதியின் துகிலை உரிக்கும் போது நீண்ட துணியாக வந்து உடலை மூடி திரௌபதியைக் காப்பாற்றியது என்ற கதை ஒன்று உள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article