IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நோய் எதிர்ப்பின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் வி மோகன் கருத்து

Get real time updates directly on you device, subscribe now.

டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் தலைவர் & முதன்மை நீரிழிவு நிபுணர், டாக்டர் வி மோகன் கூறுகையில் வலுவான நோய் எதிர்ப்புத் திறனே ஆரோக்கியமாக இருப்பதற்கான வழியாகும். இதன் மூலம் கோவிட்-19 கொள்ளை நோயை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்புத் திறனுக்கு முக்கியப் பங்களிப்பு உள்ளது. வீட்டு வேலை மற்றும் அலுவல் பணி ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் போது அதிகரிக்கும் அழுத்தம், நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க இயலாமை, வெளியே செல்ல முடியாமை ஆகியவை ஒட்டு மொத்த ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தையும் பாதிக்கிறது.

பொதுவாக இந்தியச் சமச்சீரான உணவில் முக்கிய வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் மற்றும் தவிர்க்க இயலாத சில வகைகளும் உள்ளன. நோய் எதிர்ப்புத் திறன் சரியாக இயங்க துத்தநாகம் முக்கியமாகும். மேலும் வீக்கத்தைக் குறைக்கவும் இது உதவும்.

கடந்த சில பத்தாண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்ட அறிவியல் சான்றுகளும் துத்தநாக நுகர்வு வைரல் தொற்றுகளை எதிர்க்கும் என்பதை உறுதிப்படுத்து கின்றன. வைட்டமின் சி சத்தை உடலில் சேமிக்க முடியாது என்றாலும் கணிசமான ஆரோக்கியப் பலன்கள் அதில் உள்ளன. இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைக் குறைக்க உதவுவதுடன், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். வைட்டமின் ‘டி’ மூலாதாரம் சூரிய வெளிச்சம் என்பதால் அதை எளிதாகப் பெறுவதுடன், சமர்சீர் உணவுடன் துணை உணவாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.

பருப்பு வகைகள், உளுந்து, பயறு, கொண்டைக் கடலை, பீன்ஸ், எள்ளு, பூசணி, இறைச்சி, பாதாம், முந்திரி, பைன் கொட்டைகள், முழுமையான தானியங்கள் ஆகியவற்றில் துத்தநாகச் சத்து அதிகம் இருக்கிறது. ஆரஞ்சு, அன்னாசி, கிவி, திராட்சை, எலுமிச்சை, பெர்ரி, சிவப்பு & மஞ்சள் மிளகு, தக்காளி, ப்ரோகோலி, காலிஃப்ளவர், சக்கரைவள்ளிக் கிழங்கு, முளைப் பயிர் ஆகியவற்றில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளது.

காலா மீன், சூரை மீன், மத்தி மீன் ஆகியவற்றின் காட் லிவர் மீன் எண்ணெய், முட்டைக் கரு, காளான், பசும்பால், சோயா பால், ஓட்ஸ், தானியங்கள், பாலடைக்கட்டி ஆகியவற்றில் வைட்டமின் ‘டி’ சத்து அதிகமிருக்கிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader