IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தேரர்களை சந்தித்த சுரேன் ராகவன் அழைப்பு.!!!

20

பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே தனது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.


கண்டி தலதா மாளிகைக்கு இன்று வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.


இதன் போது அங்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆளுனர் சுரேன் ராகவன் ஆசிபெற்றார்.


இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் சமமாக வாழவேண்டிய நாட்டை உருவாக்குவதற்கு சகலரதும் பங்களிப்பு அவசியம் எனவும் குறிப்பாக பௌத்த பிக்குக்கள், மத குருமாரின் பங்களிப்புக்கள் அவசியம் என்றும் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.