IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.பி.துரை சாமி நீக்கம் – பாஜகவில் இணைகிறாரா ?

Get real time updates directly on you device, subscribe now.

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்த வி.பி.துரைசாமியை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பாஜக மாநிலத் தலைவராக பதவியேற்ற முருகனை, வி.பி.துரைசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் திமுக உட்பட எல்லா கட்சிகளும் ஜாதி அரசியல் செய்கிறார்கள் என்றும் அருகில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு மு.க.ஸ்டாலின் நடந்து கொண்டிருக்கிறார் என்றும் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஜனநாயக கட்சி என்பதனை விட ஸ்டாலினை முன்னிலை படுத்துவதால் இது அவர்களுடைய குடும்ப கட்சி எனக் குற்றம் சாட்டியுள்ள துரைசாமி, பாஜக தலைவரை சந்தித்ததற்காக என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றால் என்னுடைய அடுத்தக்கட்ட முடிவு குறித்து யோசிக்க தயாராகிவிட்டேன் என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More