IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திராவிடர்களுக்கு அளிக்கும் வாக்கு, இளைய தலை முறையினருக்கு செய்யும் துரோகம் – சீமான்

Get real time updates directly on you device, subscribe now.

சமீப நாட்களாகவே சீமான் பேசும் வார்த்தைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்னாள் பாரத பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை குறித்து பேசி கடும் கண்டனத்திற்கு ஆளானர். பின்பு காங்கிரசார்அவர்மீது தேசத் துரோக வழக்கு பதிவுசெய்து கைது செய்யக்கோரி வற்புறுத்தினர். இந்நிலையில் தற்போது அதிமுக திமுக குறித்து சீமான் பேசியுள்ளார்.

வருகின்ற இடைத்தேர்தலில் மீண்டும் மீண்டும் அதிமுக திமுக போன்ற திராவிட கட்சியளிக்கு வாக்களித்தால் அது வருங்கால இளைய சமுதாயத்தினருக்கு செய்யும் துரோகம் என சீமான் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சி தலைவர் சீமான், காணை, மாம்மபழப்பட்டு மற்றும் கெடார் ஆகிய பகுதிகளில் பேசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, வடமாநிலத்தவர்கள் அங்கிருந்து வந்து தமிழகத்தில் அரசு பணியில் சேர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் தமிழக இளைஞர்களோ தலயா… அல்லது தளபதியா என்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாகத்தான் போகப் போகிறார்கள் என்று சீமான் பாணியில் ஆவேசமாக பேசினார்.
அம்மாவும் 40 திருடர்களும்! ஆனால் அம்மா இல்லை, திருடர்கள் தான் இருக்கிறார்கள்

மாறுதல் என்றில்லாமல் தொடர்ந்து அதிமுக இரட்டை இலைக்கும், திமுக உதய சூரியனுக்கும் மாறி மாறி வாக்களிப்பது இளைய தலைமுறையினருக்கும் செய்யும் துரோகம் என்றார். இந்த நிலை தொடர்ந்தால் வரலாற்று பிழை ஏற்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

திராவிட கட்சிகளுக்கு வாக்களிப்பது இளைய தலைமுறையினருக்கும் செய்யும் துரோகம் என சீமான் கூறுகிறாரே, ஆனால் அந்த இளைய தலைமுறையினரையும் திரைப்பட நடிகர்களின் பின்னால் சுற்றுவது போல் கூறுகிறாரே சீமான் என்று சீமானின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader