IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூகுள் தவறான தகவல்கள் தருவதாக டிரம்ப் எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

கூகுள் நிறுவனம் தேடு பொறியில் ஒரு சார்பான தகவல்களை தருவதால் அதை முறைப்படுத்த நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

 

கூகுளில் “டிரம்ப் நியூஸ்” எனத் தேடினால் போலி ஊடகங்களால் வெளியிடப்பட்ட பொய் செய்திகளே வருவதாகவும்,

 

கூகுள் நிறுவனம் தம்மையும் தமது கட்சியினர் குறித்த நல்ல தகவல்களையும் மறைத்து கெட்ட தகவல்களையே முதன்மையாகத் தருவதாகவும் டிவிட்டரில் டிரம்ப் சாடியுள்ளார்.

 

கூகுளை முறைப்படுத்த நேரிடும் என்பது போன்றும் அவர் எச்சரித்திருந்தார்.

 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனம் தாங்கள் எந்த ஒரு அரசுக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ தகவல்களை முதன்மைப்படுத்தித் தருவதில்லை என மறுத்துள்ளது.

 

அல்காரிதம் படி தேடுபொறியில் அவர்கள் வசிக்கும் பகுதி, முந்தைய தேடல்கள், அதிகம் பார்க்கப்பட்டவை உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தகவல்களை கூகுள் தேடி தருவதாகவும் விளக்கமளித்துள்ளது.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader