IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஹெல்மெட் அணிந்து பைக்கில் வலம் வந்த நாய்

Get real time updates directly on you device, subscribe now.

 

ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வலம் வந்த நாயின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என காவல்துறை வலியுறுத்தி வருகிறது.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் போக்குவரத்து விதிகளை சிலர் மதிப்பதில்லை. அதனால் இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகளே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் ஒரு நபர் தனக்கு மட்டுமில்லாமல் தனது நாய்க்கும் ஹெல்மெட் அணிவித்து தனது இருசக்கர வாகத்தில் அழைத்து சென்றுள்ளார். அதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் முக்கியமான பாதுகாப்பே ஹெல்மெட்தான். ஆனால் முடி கொட்டுகிறது, வியர்க்கிறது என ஏதேதோ சாக்கு போக்குகளை சொல்லிக்கொண்டு ஹெல்மெட் அணிவதை பலர் தவிர்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் இந்த வீடியோ ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை.

 

#Dog #wearing #helmet #bike

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader