IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி பிரதமரை சுற்றித் திரிந்த தெருநாய் ! வைரல் புகைப்படம்

0 53

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் அரசு பயணமாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க வருகை தந்துள்ளார். இவரது வருகையையொட்டி 7 பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை வருகை தந்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் சீன அதிபர் ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் வரவேற்றார். தற்போது மாமல்லபுரத்தில் சீன – பல்லவ வரலாற்றை உணர்த்தும் சிற்பங்களை இருவரும் பார்வையிட்டு வருகின்றனர். அப்போது பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிங்பங்களின் தொன்மை குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார்.

இந்த நிலையில் இருவரின் வருகைக்காக மாமல்லபுரத்தின் பல்வேறு இடங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்களின் பாதுகாப்பை மீறி மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் பார்வையிடும்போது ஒருதெருநாய் சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்துள்ளது.

இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக அமைந்துள்ளது. பிரதமரின் வருகைக்காக 7 அடுக்கு பாதுகாப்பு போட்டிருந்தும் அதையும் மீறி ஒரு சாதாரண நாய் எப்படி பிரதமர் இருக்கும் இடம்வரை நுழைய முடிந்தது என கேள்வி எழுப்பியுள்ளனர்.